புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு நிதி நிறுவன ஊழியர்கள் கொடுத்த கடனை கேட்டு வீட்டு வாசலில் அமர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம் பகுதியிலுள்ள பாரதியார் நகரில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் 2 மகளிர் சுய உதவி குழுக்களில் தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று வாரந்தோறும் கடன் தொகையை செலுத்தி வந்துள்ளனர். அந்த நிதி நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வரவு- செலவு வைத்துள்ளதால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கடன் தவணை தொகையை தாமதமாக பெற்றுக் கொண்டுள்ளது. ஆனால் தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக தற்போது முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் கடன் தொகையை வசூலிப்பதற்கு மகளிர் சுய உதவி குழு தலைவர்களின் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு கடன் தொகையை செலுத்தினால் தான் இந்த இடத்தை விட்டு செல்வோம் என்று பிடிவாதமாக இருந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் ஊரடங்கு முடிந்த பின்பு கடன் தொகையை செலுத்துகிறோம். அதுவரை எங்களை நிதி நிறுவனம் தொந்தரவு செய்யக் கூடாது என்று தமிழக அரசுக்கு மற்றும் மாவட்ட நிர்வாகதிற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.