Categories
சினிமா தமிழ் சினிமா

பட்டைய கிளப்பும் ‘எதற்கடி வலி தந்தாய்’ பாடல்…!!!

‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தில் ரத்தன் இசையில் நடிகர் விக்ரம் மகன் துருவ் பாடியுள்ள ‘எதற்கடி வலி தந்தாய்’ பாடல்  வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

முகேஷ் ஆர் மேத்தாவின் E4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகிவரும் ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தில் ரத்தன் இசையில் ‘எதற்கடி வலி தந்தாய்’ பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார், இதன் ஒருசில வரிகளை நடிகர் சியான் விக்ரம்  மகன் துருவ் எழுதி சொந்த குரலில் பாடியுள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி  பல மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் எதற்கடி வலி தந்தாய் பாடல் வெளியாகிய 24 மணி நேரத்திற்குள் 4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது.

Image result for எதற்கடி வலி தந்தாய்

முதலில் ‘வர்மா’ என்ற பெயரில் இயக்குனர் பாலா இயக்கி வந்த இப்படத்தை குறிப்பிட்ட சில காரணங்களுக்காக தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை நிறுத்தியது. மேலும் இப்படத்தை  புதிய இயக்குனரை வைத்து மீண்டும் எடுக்க உள்ளதாக  கூறியது. அதன்படி தற்போது ‘ஆதித்ய வர்மா’ எனும் தலைப்புடன் இயக்குனர் கிரிசய்யா இயக்கியுள்ளார். ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் துருவிற்கு ஜோடியாக ஹிந்தியில் வருண் தவான் நடித்த ‘அக்டோபர்’ படத்தின் கதாநாயகி பனிதா சந்து நடித்துள்ளார்.

Categories

Tech |