Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ராதே ஷ்யாம்’ பட செட்…. மருத்துவமனைக்கு அளித்த படக்குழு….. குவியும் பாராட்டுக்கள்…!!!

படத்திற்கு அமைக்கப்பட்ட செட்டை ‘ராதே ஷ்யாம்’ படக்குழுவினர் மருத்துவமனைக்கு அளித்துள்ளனர்.

பாகுபலி திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ். இவர் தற்போது யுவி கிரியேஷன் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் ‘ராதே ஷ்யாம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

ஆனால் தற்போது கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருவதால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஓத்திவைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்திற்காக அமைக்கப்பட்ட மருத்துவமனை செட்களை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள படக்குழுவினர் அனுமதி அளித்துள்ளனர். மேலும் சில மருத்துவ உபகரணங்களையும் அளித்துள்ளனர். ராதே ஷ்யாம் படக்குழுவினரின் இந்த நற்செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

Categories

Tech |