Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட சம்பவம்… கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொடும்பாளூர் காலனியில் குடைக்கண்ணு என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த நடராஜன் உடன் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக இவர்கள் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் சம்பவ இடத்தில் பரிதாபமாக  குடைக்கண்ணு இறந்து விட்டார்.

இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த நடராஜனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் குடைக்கண்ணு உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை காவல் துறையினர் கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |