பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் அகிலன் நடிகர் விஷாலுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா . இந்த சீரியல் மற்ற தொலைக்காட்சி சீரியல்களை பின்னுக்குத் தள்ளி டி.ஆர்.பி யில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் ரோஷினி கதாநாயகியாகவும், அருண் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் அஞ்சலி மற்றும் அகிலன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் .
இதில் நடிகர் அகிலன் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து விளம்பரப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடிகர் பிரபுதேவாவின் பஹீரா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பிரபல நடிகர் விஷாலுடன் இணைந்து அகிலன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.