Categories
அரசியல் மாநில செய்திகள்

MLA-க்களாக பதவியேற்கும் அனைவருக்கும்…. என்னுடைய வாழ்த்துக்கள் – கமல் டுவிட்…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்பட்டு மே இரண்டாம் தேதி வாக்குப் பதிவுகள் எண்ணப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றியை கைப்பற்றியது.  இதையடுத்து தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். மேலும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது. இந்நிலையில் நேற்று தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து இன்று தமிழக 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. சட்டப்பேரவை எம்எல்ஏவாக முதல்வர் முக ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என கூறி பதவியேற்றார். இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஓ.எம்எல்ஏவாக பன்னீர் செல்வம் பதவியேற்றுக்கொண்டார். புதிய எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வருகிறார். இந்நிலையில் கமலஹாசன், “இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என டுவிட் செய்துள்ளார்.

Categories

Tech |