Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள்…. பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் ரகசியமாக விற்பனை செய்த தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மது பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அழகாபுரியில் வீட்டில் வைத்து மது பாட்டில்கள் மற்றும் குட்கா விற்பனை செய்வதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அழகாபுரி கிராமத்திற்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டின் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் ஏராளமாக பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்ததை கண்டு பிடித்துள்ளனர்.

இதனால் காவல்  துறையினர் வீட்டிலிருந்த அன்பரசன் என்ற வாலிபரை கைது செய்ததுடன் அங்கிருந்த மதுபாட்டில்கள் மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து பறிமுதல் செய்த குட்கா மற்றும் மது பாட்டில்களின் மதிப்பு சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல் துறையினர் அன்பரசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |