பிரபல சீரியல் நடிகை ஜனனி தனது அம்மாவை ரசிகர்களுக்கு முதல் முறையாக அறிமுகப் படுத்தியுள்ளார்.
பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் மிகவும் சுவாரசியத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகன் செந்திலுக்கு மூன்று தங்கைகள் உள்ளனர்.
அதில் ஒருவர் தான் சின்னத்திரை நடிகை ஜனனி. இவர் இந்த சீரியலுக்கு முன் செம்பருத்தி, மௌனராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில், நடிகை ஜனனி தனது அம்மாவை முதல் முறையாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.மேலும் அவர் தன் அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.