Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மே15-ம் தேதி ரெடியா இருங்க…. இந்த எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்…. மாவட்ட கலெக்டரின் அறிவிப்பு….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண தொகையாக 2,000 ரூபாய் வருகின்ற 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக பதவியேற்ற திரு முக. ஸ்டாலின் அவர்கள் ஐந்து முக்கிய அரசாணைகளை பிறப்பித்தார். அவைகளில் ஒன்றான கொரோனா நிவாரண தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண தொகையின் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வருகின்ற 15ஆம் தேதி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதனால் ரேஷன் ஊழியர்கள் தினசரி 200 டோக்கன்களை ரேஷன் அட்டைதாரருக்கு விநியோகம் செய்கின்றனர். இதனையடுத்து டோக்கன் பெற்ற அனைவரும் மே 15-ஆம் தேதியில் இருந்து ரேஷன் கடைகளுக்கு சென்று கொரோனா நிவாரண தொகையான 2 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் வட்ட வழங்கல் அலுவலர் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04179 222111 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அறிவிக்கலாம் என கலெக்டர் சிவனருள் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |