கொரோனாவை கட்டுப்படுத்த தான் கூறிய அறிவுரையை பிரதமர் மோடி கேட்டிருந்தால் இப்படிப்பட்ட பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் பாஜக எம்பி சுப்பிரமணியன் சவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள இந்தியா தயாராக வேண்டும்.
மேலும் நான் கடந்த முறையே தொற்றுக்கு எதிரான பொறுப்பை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு ஒப்படைக்குமாறு வலியுறுத்தி இருந்தேன். ஆனால் அதை பிரதமர் மோடி செவிசாய்த்து கூட கேட்கவில்லை தற்போது ஆக்சிஜன் வினியோகத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு பணிக் குழுவை பரிந்துரைக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது ஜனநாயகத்தில் அரசுக்கு எதிரான வாக்கு என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.