Categories
டென்னிஸ் விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி : சாம்பியன் பட்டத்தை வென்ற ‘அலெக்சாண்டர் ஸ்வெரேவ்’…!!!

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

நேற்று முன்தினம் களிமண் தரையில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், தரவரிசை பட்டியலில் 6வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ்,  தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள இத்தாலி வீரரான பெரேட்டினியுடன்  மோதினார். இருவரும்  தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை காட்டியதால்  போட்டியில்  அனல் பறந்தது. இதில் முதல் செட்டில் 5-0  என்ற கணக்கில் பெரேட்டினி கைப்பற்றினார். ஆனால் அடிபட்ட புலி தான் ஆக்ரோஷத்துடன் இருக்கும் என்பது போல, அதிரடி ஆட்டத்தை காட்டிய அலெக்சாண்டர் 7-6 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். இருந்தாலும் அவர் முதல் செட்டில் வெற்றிபெற தவறிவிட்டார். இதன்பிறகு 2வது செட்டிலும்  4 புள்ளிகள் சமநிலையை வகித்த பெரேட்டினி,  அலெக்சாண்டருக்கு கடும் சவால் கொடுத்தார்.

ஆனால் இதன் பிறகு அலெக்சாண்டர் அதிரடி காட்ட, 2வது செட்டை தனதாக்கி கொண்டார். 2 மணி நேரம் 40 நிமிடங்கள் வரை நடந்த, பரபரப்பான இறுதிப் போட்டியில்அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 6-7 (8-10), 6-4, 6-3 என்ற செட் கணக்கில்  வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலமாக 8 போட்டிகளில் தொடர்ச்சியாக ,வெற்றி பெற்ற பெரேட்டினியின் வீறுநடைக்கு  முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதோடு தரவரிசைப் பட்டியலில் டாப் 10 இடங்களில் உள்ள 3 வீரர்களை , 2 வது முறையாக அலெக்சாண்டர் வீழ்த்தியுள்ளார்.  இந்த வெற்றியின் மூலம் 24 வயதான அலெக்சாண்டர், 2வது முறையாக  மாட்ரிட் ஓபன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். போட்டியில் பட்டத்தை வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவ்க்கு ரூபாய் 2 கோடியே 81 லட்சம் பரிசுத் தொகையாகவும், தரவரிசையில் 1000 புள்ளிகள் கிடைத்துள்ளது.

Categories

Tech |