புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கனை ரேஷன் கடை ஊழியர் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொது விநியோகத் திட்ட அரிசி பெரும் குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 கொரோனா நிவாரண தொகை முதல் தவணையை வருகிற 15 ஆம் தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 லட்சத்து 65 ஆயிரத்து 947 அரிசி பெரும் குடும்ப அட்டை தாரர்களுக்கு தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கான நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்ட டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. அந்த டோக்கனை கடை ஊழியர் வழங்கியுள்ளார்.