சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 196 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 196 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமைகளில் 855 பேர் கொரோனா தொற்றிற்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே 110 பேர் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.