நெல்லையில் வாலிபர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் டிரைவராக பணிபுரிந்து வந்த குமார் என்ற வாலிபர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தன்னுடைய பைக்கில் ரெட்டியார் புரம் அருகே சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று நிலைதடுமாறிய குமார் பைக்கிலிருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த குமாரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக வீரவநல்லூரிலிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் முன்கூட்டியே இறந்து விட்டதாக தகவல் கொடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.