நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியுடன் இணைந்து நடிகை திரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது . ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளில் (மே 1-ஆம் தேதி) வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
மேலும் அவ்வப்போது நடிகர் அஜித்தின் பழைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியுடன் இணைந்து நடிகை திரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்டதாக தெரிகிறது .