Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பிரியாணியில் வந்த தகராறு…. அடித்து நொறுக்கப்பட்ட பொருட்கள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வாணியம்பாடியில் 8 பேர் கொண்ட கும்பல் பிரியாணி பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் பிரியாணி கடை ஒன்று இயங்கி வருகின்றது. இந்நிலையில் 8 பேர் கும்பலாக சென்று பிரியாணி பார்சலை வாங்கியுள்ளனர். இதனையடுத்து பிரியாணி கடை உரிமையாளர் பயாஸ், சுல்தான் பணம் கேட்டபோது அவர்கள் கொடுக்காமல்  பிரியாணி கடை உரிமையாளர் மற்றும் அங்கு வேலை செய்யக்கூடிய ஊழியர்களை தாறுமாறாக தாக்கியுள்ளனர். மேலும் அந்த 8 பேர் சேர்ந்து பிரியாணி கடையில் இருந்த அனைத்து பொருட்களையும் அடித்து உடைத்து  சூறையாடி விட்டனர்.

இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அதை தடுத்து நிறுத்தியபோதும் கேட்காமல், அந்தவழியாக சென்ற மினிலாரி கண்ணாடியை உடைத்துள்ளனர். இதனால் பிரியாணி கடை உரிமையாளர் பயாஸ் மற்றும் மினி லாரி உரிமையாளர் சுந்தர் இருவரும் சேர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின்படி 8 பேரில் ஒருவரான ஷாஜகான் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் பிரியாணி கடையில் சென்று தகராறில் ஈடுபட்ட மற்றும் மினிலாரியின் கண்ணாடியை உடைத்த மீதமிருக்கும் அந்த 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |