Categories
தேசிய செய்திகள்

Breaking: இந்திய மருத்துவ சங்கம் பரபரப்பு அறிவிப்பு…. மக்களுக்கு கடும் எச்சரிக்கை…..!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் சிலர் மாட்டு சாணம் மற்றும் கோமியம் கொரோனாவை குணப்படுத்தி விடும் என்ற மூட நம்பிக்கையை நம்பி செயல்பட்டு வருகிறார்கள். மாட்டுச் சாணமும், கோமியமும் கொரோனாவை குணப்படுத்தும் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என இந்திய மருத்துவ சங்க தலைவர் எச்சரித்துள்ளார். மாட்டு சாணம் மற்றும் கோமியம் ஆகியவை மேலும் பல நோய்களும் பரவ வாய்ப்பாக அமைந்துவிடும். அதனால் இதனை செய்தால் கொரோனா குணமாகிவிடும் என்று யாரும்  நம்பி விடவேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |