Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்லை….. மினிலாரியில் கடத்திய பொருள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

திருப்பத்தூரில் சட்டவிரோதமாக மது கடத்திய வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் மேற்பார்வையில், போலீசார் பறவைகுட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற மினிலாரி ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்ததில் 1,152 வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அந்த மினிலாரியில் இருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மினிலாரியில் வந்தவரிடம் போலிசார் நடத்திய விசாரணையில் அவர் பறவைகுட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் பிரபு என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் பிரபுவின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |