Categories
மாநில செய்திகள்

’பள்ளிக் கட்டிடத்தை கட்டித்தாங்க’…. 7 வயது மாணவி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்….!!!!

பொன்னேரியில் வசித்து வரும் பாஸ்கர் என்பவரின் மகள் அதிகை முத்தரசி(7). அவர் அப்பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்க மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டும் என்றும் சேதமடைந்த பள்ளி கட்டடத்தை சீரமைத்து தர வேண்டும் என்றும் பல துறை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர்கள் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வழக்கறிஞரான தனது தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் அந்த ஏழு வயது சிறுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

பல மாதங்களாக நீடித்த இந்த வழக்கில் இறுதியாக ஒரு ஆண்டுக்கு ஒரு புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும். ஆக்ரமிப்பு நிலத்தை மீட்டு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் காரணமாக பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து மாணவிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் மாணவியின் எதிர்கால நலன் கருதி தனியார் பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது அந்த மாணவி பள்ளி கட்டிடத்தை கட்டி தர கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் அந்த பள்ளியை ஆய்வு செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ் சென்றுள்ளார். ஆய்வுக்குப் பிறகு அம்மாணவியை சந்தித்து அமைச்சர் உரையாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |