கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் புதிதாக 200 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அந்த மருந்தை 3 மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கூறியிருந்த நிலையில், கூடுதலாக 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து அரசு மருத்துவமனையில் 450 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் இருந்ததுள்ளது. மேலும் தற்போது கூடுதலாக 200 ஆக்ஸிஜன் படுக்கைகள் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மணப்பாறை அரசு மருத்துவமனையிலும் 100 ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனை முடிவில் 12லிருந்து 14% பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் முழு ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் யாரும் வெளியே வராமல் கட்டுப்பாடுக்கு ஒத்துழைக்குமாறு கலெக்டர் திவ்யதர்ஷினி கேட்டுக்கொண்டுள்ளார்.