மாங்காய் பறிக்க முயற்சி செய்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் சண்முகம் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு மதன் என்ற 6-ஆம் வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மதன் ஈக்காட்டுத்தாங்கல் மாந்தோப்பு பகுதியில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்குள்ள சுற்று சுவர் மீது ஏறி மரத்தில் இருந்த மாங்காயை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து மதனின் கை அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் எதிர்பாராதவிதமாக உரசி விட்டது.
இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் இந்த கிண்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.