Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அரியலூரில் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்ததோடு 127 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு டாஸ்மாக் கடை மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை போன்றவற்றை நேற்று முதல் 24 தேதி வரை செயல்படக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார் பாளையம் பகுதியில் சில பேர் ஊரடங்கை மீறி மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி காவல்துறையினர் உடையார்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து 3 பேர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தபோது அவர்களை கையும், களவுமாக காவல்துறையினர் பிடித்து விட்டனர். அதன்பின் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அப்பகுதியில் வசிக்கும் பழனிவேல், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 127 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததோடு ஊரடங்கை மீறி மது விற்பனை செய்த குற்றத்திற்காக அவர்களை கைது செய்தனர்.

Categories

Tech |