திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேர் கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணத்தால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நாளொன்றுக்கு 869 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையானது 30,776 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,667 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து 558 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையானது 25, 330 ஆக உள்ளது .
இந்நிலையில் 50 வயதிற்கு மேற்பட்ட 5 பெண்களும், 60 வயதிற்கு மேற்பட்ட 6 ஆண்களும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். ஆனால் அவருகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி 11 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 279 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 6,15,000 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதோடு 2,29,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.