கொரோனா தொற்றுக்கான சந்தேகங்களை 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் கொரொனா தொற்றுக்கான சந்தேகங்களை குறித்து 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியாளர் ரத்னா, மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்னுலாப்தீன், துணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி ஆகியோர் இணைந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் போது, தேவையான ஆக்ஸிஜன் வினியோகம், மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் போன்றவற்றை இந்த கட்டுப்பாட்டு அறை மூலமாக தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தனர். மேலும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற எண்ணிலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 04329-228709 போன்ற எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு கொரோனா தொற்றிற்கான சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியாளர் ரத்னா தெரிவித்துள்ளார்.