Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனெகா குறித்த சந்தேகங்கள்… இவங்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது… அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பிரான்சில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு போடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா தடுப்பூசியை 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக போட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை ஐந்து வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு போடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சர் ஒளிவிர் வீரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசிகளை போடக்கூடாது என்று சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் ரத்தம் உறைதல் எனும் நோய் இந்த தடுப்பூசியால் ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரான்ஸ் மருந்துகள் இது மிக அரிதான ஒன்று என்று ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

Categories

Tech |