டெல்லியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் பஹர்கஞ்சில் என்ற இடத்தில் விஜேந்தர் பால் என்ற நபர் அவரது மனைவி பிரேர்னா சைனி மற்றும் அவரது மகளுடன் வசித்து வருகிறார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக பிரேர்னா சைனி தனது 11 வயது மகளுடன் மும்பையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். பிறகு தனியாக வசிக்க முடியாத பால் தனது மனைவியை தேடி மும்பைக்கு சென்றுள்ளார். மே 3ஆம் தேதி இரவு 7 மணி அளவில் வெர்சோவா சோஷியல் என்ற பகுதிக்கு அவரது மனைவியை வரச் சொல்லியுள்ளார். பின்னர் அங்கு வந்த மனைவியிடம் தன்னுடன் வந்து குடும்பம் நடத்தும்படி கூறியுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த மனைவி அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக அங்குள்ள ஆட்டோவில் ஏறி சென்றார். ஆத்திரமடைந்த அவர் அந்த பெண்ணை துரத்தி சென்று அவரின் மூக்கை கடித்து துப்பியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் கதறிய அந்த பெண் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் அவரது மூக்கில் 18 தையல்கள் போடப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண் தனது கணவர் மீது போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து கணவன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.