கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.89 கோடியாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தோற்றால் இதுவரை 15,89,54,425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33,06,824 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே 13,73,80,659 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றிற்கு சுமார் 1,82,67,526 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் 1,07,153 பேரின் நிலைமை தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளது. மேலும் அமெரிக்கா உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், அதனை தொடர்ந்து பிரான்ஸ், ஸ்பெயின், துருக்கி ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களிலும் உள்ளது.