“மோடி கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் மூன்று கருத்துக்களை அறிவித்தார். இந்நிலையில் பிரதமர் வெளியிட்ட மூன்று அறிவிப்புகளை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அதில், சிறிய குடும்பம் ஒரு தேசபக்தி கடமை, செல்வத்தை உருவாக்குபவர்களை மதிக்கவும், பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மூன்று அறிவுரைகளில், எஃப்.எம் மற்றும் அவரது வரி அதிகாரிகள் மற்றும் புலனாய்வாளர்கள் பிரதமரின் இரண்டாவது அறிவுரையை சத்தமாகவும் தெளிவாகவும் கேட்டார்கள் என்று நம்புகிறேன். முதல் மற்றும் மூன்றாவது அறிவுரைகள் மக்கள் இயக்கங்களாக மாற வேண்டும். உள்ளூர் மட்டங்களில் இயக்கங்களை வழிநடத்த தயாராக இருக்கும் நூற்றுக்கணக்கான அர்ப்பணிப்பு தன்னார்வ அமைப்புகள் உள்ளன
Of the three exhortations, I hope the FM and her legion of tax officials and investigators heard the PM's second exhortation loud and clear
— P. Chidambaram (@PChidambaram_IN) August 16, 2019
The first and third exhortations must become people's movements. There are hundreds of dedicated voluntary organisations that are willing to lead the movements at local levels
— P. Chidambaram (@PChidambaram_IN) August 16, 2019
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கூறியதாவது, “மோடி கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு இருப்பதுபோல் தெரிகிறது. அது என்ன நிர்பந்தம் என்பது மோடிக்கும், சிதம்பரத்திற்கும் மட்டுமே தெரியும் என்று தெரிவித்துள்ளார்.