Categories
மாநில செய்திகள்

அரசு விழாக்களில் எனது புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம் – இறையன்பு வேண்டுகோள்…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்பட்டு மே இரண்டாம் தேதி வாக்குப் பதிவுகள் எண்ணப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றியை கைப்பற்றியது. ஆனால் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். மேலும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது. இந்நிலையில் நேற்று தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

தலைமைச்செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டார். இவர் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார். எனவே தான் எழுதிய புத்தகங்கள் அரசு வாங்க வாய்ப்புள்ளது என எண்ணிய இவர், அரசு விழாக்களில் தனது புத்தகங்களை பரிசளிக்க கூடாது எனவும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் வாங்கப்படும் புத்தகங்களில், தனது புத்தகங்களை தவிர்க்குமாறும் தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |