இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல மாநிலங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கின் காரணமாக மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், ஜார்க்கண்ட், தெலங்கானா, சண்டிகர், லடாக், தமன்-டியு, லட்சத்தீவு மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.