சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல்லிலுள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் நெய்க்காரப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதில் இரண்டு பேர் அரிசி மூட்டைகளை கடத்தி வந்தததை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடம் விசாரணை செய்த போது சேலம் நாழிக்கல்பட்டி பகுதியை சேர்ந்த சக்திமுருகன் மற்றும் மாமாங்கம் என்பதும் ரேஷன் அரிசியை நாமக்கல்லிலுள்ள கோழிப்பண்ணைக்கு கடத்தி செல்வதையும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து காவல் துறையினர் அவர்களிடமிருந்த 1 1/2 டன் ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.