பிரிட்டன் இளவரசி டயானாவின் சிலை திறப்பு விழாவில் இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் இருவரும் தனித்தனியாக உரையாற்ற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் இளவரசி டயானாவின் 60வது பிறந்தநாளிற்காக வரும் ஜூலை மாதம் முதல் தேதியன்று கென்சிங்டன் மாளிகையில் அவரின் உருவச் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் இளவரசர் ஹரி தன் சகோதரர் இளவரசர் வில்லியமுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இளவரசர் ஹரி தன் தாத்தாவின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்திருந்த போது அரச குடும்பத்தினர் சிலர் அவரை புறக்கணித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த ஹரி தன் மனைவியின் இரண்டாம் பிரசவத்தை காரணமாக கூறி திறப்பு விழாவை தவிர்க்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இரு சகோதரர்களும் ஒன்றிணைவார்கள் என்று நினைத்தவர்களுக்கு, அதிர்ச்சியளிக்கும் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது சிலை திறப்பு விழாவன்று இளவரசர்கள் ஹரி மற்றும் வில்லியம் இருவரும் தனித்தனியாக உரையாற்றுவதற்கு முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.