மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாக்கம் அய்யந்தோப்பு பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்-மில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனோகரன் தனது மோட்டார் சைக்கிளில் மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு அய்யந்தோப்பு பகுதிக்கு மீண்டும் புறப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து இவரது மோட்டார் சைக்கிள் திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த பேருந்து இவரின் மோட்டர் சைக்கிள் மீது மோதிவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.