போலீஸ்காரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் பிரசாத் என்ற போலீஸ்காரர் வசித்து வருகிறார். இவருக்கு அனுசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபத்தில் அனுசியா தனது குழந்தைகளோடு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அனுஷாவை சமாதானப்படுத்தி பிரசாத் மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் பிரசாத் இறைச்சி வாங்க கடைக்கு சென்ற சமயத்தில் அனுசியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதன் பின் திரும்பி வந்து பார்த்த பிரசாத் தனது மனைவி சடலமாக தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்ற அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அனுஷியவின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.