Categories
உலக செய்திகள்

சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து தாக்குதல் நடத்திய நபர்.. வாடிக்கையாளர்களின் துணிச்சலான செயல்..!!

நியூசிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து, மர்மநபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நியூசிலாந்தில் உள்ள Dunedin என்ற பகுதியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில் சூப்பர் மார்க்கெட்டின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் நான்கு பேர் காயமடைந்த நிலையில், அதில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் துணிச்சலுடன் போராடி அந்த நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளதாவது, இந்த நபர் தாக்குதல் நடத்தியதற்கு நோக்கம் என்ன? என்பது தெரியவில்லை. எனினும் இது உள்நாட்டு பயங்கரவாத தாக்குதல் என்பதற்கான அறிகுறியாகவும் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தாக்குதல் நடத்திய நபருக்கும் காயங்கள் ஏற்பட்டிருப்பதால், காவல்துறை காவலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |