Categories
மாநில செய்திகள்

அடடே…! மாஸ் காட்டுகிறார் ஐயா… ஸ்டாலினின் சரவெடி நடவடிக்கை….!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக பயணிகள் தவிப்பதை அறிந்த முதலமைச்சர் முக. ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகள் உரிய பயணத்தை மேற்கொள்ள முடியாமல் நீண்ட நேரமாக காத்திருந்தனர். இந்த செய்தி முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து தவிர்த்து வந்த அந்த பயணிகளின் குறையை போக்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முக .ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளை கண்ணப்பர் திடலில் உள்ள சமூக நல கூடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இந்த பயணிகள் அனைவரும் பயணம் செய்வதற்கு ஏதுவாக ரயில் வசதியை ஏற்படுத்தி தருவதற்கு ரயில்வே நிர்வாகத்துடன் தமிழக அரசால் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |