Categories
தேசிய செய்திகள்

மோடி அரசின் அலட்சியத்தை… இந்தியா அனுபவித்து வருகிறது… சோனியா காந்தி குற்றச்சாட்டு..!!

பிரதமர் மோடி அரசின் அலட்சியத்திற்கான விலையை இந்தியா தற்போது சந்தித்து வருவதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மோடி அரசை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கொரோனா தொற்று குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதில் அவர் கூறியதாவது: “பிரதமர் மோடி தலைமையில் இயங்கி வரும் மத்திய அரசின் அலட்சியத்தால் இந்தியா பெரும் இன்னலை சந்தித்து வருகின்றது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா உச்சத்தை அடைந்துள்ளது. மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்ட காரணத்தினால் நாடு பெரும் இன்னலை சந்தித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த சூழலில் பல நிபுணர்கள் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை வரும் எனவும் எச்சரித்துள்ளனர். இந்த சூழலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியின் அனைத்து தொண்டர்களும் நாட்டு மக்களுக்கு தோள் கொடுக்க வேண்டும் என்று அவர் அந்தக் கூட்டத்தில் பேசியிருந்தார்.

Categories

Tech |