ஜிம்பாப்வேயில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் 16 பேரை திருமணம் செய்து 151 பிள்ளைகளுடன் வாழ்வதோடு, 17 வது திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வேயில் வசிக்கும் Misheck Nyandoro (66), ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான இவர் இதுவரை 16 பேரை திருமணம் செய்துள்ளார். தற்போது இவருக்கு 151 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் 17-ஆவது ஆக ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இதனை அவர் “பலதார மணத்திட்டம்” என்று கூறியுள்ளார். “இந்த வயதிலும் மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன். ஏனென்றால் என் மனைவிகள் நிறைய பேர் வயதானவர்கள். மேலும் 14 கால்பந்து அணிக்கு தேவையான பிள்ளைகள் என்னிடம் இருக்கிறார்கள். எனக்கு தேவையான அனைத்தையும் பிள்ளைகள் செய்திருக்கிறார்கள்.
என் மனைவிகளும் என் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்கள். ஆனால் நூறு மனைவிகளை வைத்து ஆயிரம் குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இவ்வளவு குழந்தைகள் மற்றும் மனைவிகள் இருந்தாலும் எனக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படவில்லை. அனைத்து மனைவிகளும் எனக்காக சமைப்பார்கள். சுவையான உணவை மட்டும் தான் சாப்பிடுவேன். சுவை இல்லையென்றால் தூக்கி வீசி விடுவேன்.
என் வயதான மனைவிகள் என்னோடு நெருக்கம் காட்டுவதில்லை” என்று குறை வேறு கூறுகிறார். மேலும் இரவு நேரங்களை பொறுத்தமட்டில் ஒரு அட்டவணை தயாரித்து, அதன் படி மனைவிகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறிவிட்டார்.