கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி அனைத்து சாலைகளும் வெறிசோடி காணப்படுகின்றது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த முழு ஊரடங்கு சமயத்தில் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளின் படி திருச்சி மாவட்டத்தில் வாடகை கார்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள், ஆட்டோக்கள் ஆகியவை செயல்படவில்லை. மேலும் மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் பேருந்துகள் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டதால் நாள்தோறும் பரபரப்பாக காணப்படும் முசிறி, சத்திரம், துறையூர், மணப்பாறை, திருச்சி மத்திய பேருந்து நிலையம் போன்ற மாவட்டத்தில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜவுளி கடைகள், பர்னிச்சர் கடைகள் மற்றும் நகை கடைகள் ஊரடங்கின் விதிப்படி அடைக்கபட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகை, இறைச்சி மற்றும் டீக்கடைகள் குறிப்பிட்ட நேரம் வரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.