ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 720 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. இந்த நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 720 நபர்களுக்கு தொற்று உறுதியானது.
இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை சிகிச்சைக்காக தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் அரசு மருத்துவமனையில் 2,286 நபர்கள் கொரோனாவிற்காக சிகிச்சை பெறுகின்றனர். மேலும் தனியார் மருத்துவமனையில் 979 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.