Categories
சினிமா தமிழ் சினிமா

‘ரோஜா’ சீரியல் நடிகை வெளியிட்ட சந்தோஷ செய்தி… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

ரோஜா சீரியல் நடிகை ஷாமிலி கர்ப்பமாக இருப்பதாக தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ரோஜா. இந்த சீரியல் தொடர்ந்து மற்ற தொலைக்காட்சி சீரியல்களை பின்னுக்கு தள்ளி டி.ஆர்.பி யில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் சிபுசூரியன் கதாநாயகனாகவும் பிரியங்கா நல்காரி கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர்.

Shamili Sukumar Wiki, Biography, Age, Serials, Images - News Bugz

இந்த சீரியலில் அணு என்கிற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஷாமிலி சுகுமார். இவர் தென்றல், வள்ளி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார் . மேலும் இவர் ஜீவா, பென்சில் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஷாமிலி கர்ப்பமாக இருப்பதாக தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |