Categories
தேசிய செய்திகள்

எழுதுவதற்கு பதிலாக நியூயார்க் டைம்ஸ் படியுங்கள்… ப. சிதம்பரம் பதிலடி…!!

கடிதம் எழுதுவதற்கு பதிலாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையை படியுங்கள் என்று ஜேபி நட்டாவுக்கு ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் மோடி தலைமையிலான மத்திய அரசு கொரோனா தொற்று சம்பந்தமாக எந்த நடவடிக்கைகளையும் சரியாக கையாளவில்லை என்று பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் குற்றம் சாட்டி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் பிரபல பத்திரிக்கையான தி லான்டேக் இதழும் மோடி அரசை பற்றி கடுமையாக விமர்சனம் செய்து எழுதி இருந்தது.

இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் மோடி அரசை பற்றி குற்றம்சாட்டியிருந்தார். இதன் பிறகு பாஜகவை சேர்ந்த ஜேபி நட்டா கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்திற்கு காங்கிரஸ் கட்சியின் பா சிதம்பரம் பதில் அளித்துள்ளார். அதில் கடிதம் எழுதுவதற்கு பதிலாக மே 6-ஆம் தேதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ” இந்தியா பிரச்சனை இப்பொழுது உலக பிரச்சனை” என்ற கட்டுரையைப் படியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அந்த கட்டுரை எழுதியவர்கள் நோபல் பரிசை வென்றவர்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Categories

Tech |