வங்கி கடன் பெறும் போது செலுத்தவேண்டிய முத்திரைத்தாள் பதிவு கட்டணத்திற்கு டிசம்பர் மாதம் வரை விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்து வருகின்றது.
அதேபோல் தற்போது வங்கி கடன் பெறும் போது செலுத்த வேண்டிய முத்திரைத் தாள் பதிவு கட்டணத்திற்கு டிசம்பர் வரை விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுனர்கள் இஎம்ஐ கட்டுவதற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.