பிரிட்டன் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், அடுத்த மாதத்தில் முகக்கவசம் அணிவது குறித்த கட்டுப்பாடுகளை அரசு மாற்றம் செய்யலாம் என்று கூறியுள்ளார்.
பிரிட்டனில் தற்போது விதிமுறைகளை தளர்த்தும் திட்டத்திற்குரிய நான்காம் கட்டமானது, ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்படி முகக்கவசம் அணிவது குறித்த விதிமுறைகள் மாற்றப்படும் என்று அமைச்சர்கள் கூறியதாக சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் கடந்த கோடை காலம் முதல் பொது போக்குவரத்து மற்றும் கடைகள் போன்ற பல இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மேலும் பிரிட்டன் சுகாதார செயலாளர் 35 வயதிற்கு அதிகமான நபர்களுக்கு கொரனோ தடுப்பூசி விரைவில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.