Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தல தோனியை இப்படிதான்”…..”ஸ்கெட்ச் போட்டு டக் அவுட் பண்ணோம்” ….! ஆவேஷ் கானின் ருசிகர தகவல் …!!!

இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் விக்கெட்டை கைப்பற்றியதை பற்றி ஆவேஷ் கான் வெளிப்படையாக பேசியுள்ளார் .

14 வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த தொடரில் 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், வீரர்களுக்கு  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள்  காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் இளம் வீரர்கள் பலர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். குறிப்பாக டெல்லி அணியின் விளையாடிய இளம் வீரர் ஆவேஷ் கான் அபாரமாக பந்துவீசி ,அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின், தரவரிசை பட்டியலில் 2வது இடத்தைப் பெற்றுள்ளார். இதனால் இவரை  இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் சில நாட்களுக்கு முன் பாராட்டிப் பேசியுள்ளார். இந்நிலையில் இந்த சீசனில் டெல்லி அணி, சிஎஸ்கே அணியுடன் முதல் போட்டியில் மோதியது. அப்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் விக்கெட்டை கைப்பற்றிய ஆவேஷ் கான், அது   பற்றி தகவலை பகிர்ந்துள்ளார்.

தோனியின் விக்கெட்டை கைப்பற்றி இதற்கு முக்கிய காரணமாக அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் உதவியாக இருந்தார் என்று கூறியுள்ளார். அந்தப் போட்டியில் இறுதிக்கட்டத்தில் சில ஓவர்கள் மட்டுமே இருந்தது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி களமிறங்கினார்.அப்போது ரிஷப் பண்ட் ,தோனியிடம் நீ பௌலிங் செய்யும்போது, ஷார்ட் பாலாக வீசு  என்று கூறியுள்ளார். ரிஷப் பண்ட் சொன்னதை அப்படியே செய்த ஆவேஷ் கான், ஷார்ட் பாலாக பந்துவீச ,கேப்டன் தோனி அவுட்டாகி வெளியேறினார். எனவே கேப்டன் ரிஷப் பண்ட் யோசனைதான் ,கேப்டன் தோனியின் விக்கெட்டை கைப்பற்ற முயன்றது என்று கூறியுள்ளார். அதோடு எனக்கும் ரிஷப் பண்ட்-க்கும் இடையே ,நல்ல ஒரு புரிதல் காணப்படுவதாகவும், நான் எப்போதும் பௌலிங் செய்யும்போது, ரிஷப் பண்டின் சைகைகளை  கவனித்துக்கொண்டு, அவர் சொல்லும்படி பந்து வீசுவேன்  என்று ஆவேஷ் கான் கூறியுள்ளார்.

Categories

Tech |