Categories
தேசிய செய்திகள்

ரூ. 110 கோடி நிதியுதவி… ட்விட்டர் நிறுவனம் அதிரடி…!!

இந்தியாவிற்கு கொரோனா நிவாரண நிதியாக டுவிட்டர் நிறுவனம் 110 கோடியை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன.

மக்கள் தொடர்ந்து அதிக அளவில் உயிரிழந்து வருவதால் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலுள்ள நிறுவனங்களும் இந்தியாவிற்கு தங்களால் இயன்ற அளவுக்கு கொரோனா நிவாரண நிதியை வழங்கி வருகின்றது. தற்போது ட்விட்டர் நிறுவனமும் இந்தியாவிற்கு 110 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. ரூ.110 கோடியை 3 தொகையாக பிரித்து 3 என்ஜிஓக்களுக்கு வழங்கியுள்ளோம். இதன் மூலம் இந்திய அரசுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |