நடிகை அமலாபால் மலை உச்சியில் தனது சகோதரர் மடியில் அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அமலா பால். இவர் இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் தலைவா, வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, ராட்சசன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார்.
தற்போது நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள அதோ அந்த பறவை போல் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமலா பால் மலை உச்சியில் தனது சகோதரர் மடியில் அமர்ந்து சிரித்தபடி போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.