சேலம் மாவட்டத்தில் கொரோனா நிவாரண தொகையை பெறுவதற்காக வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் கூறிய படி கொரோனா நிவாரண தொகை 4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தை முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக 2000 வழங்கியுள்ளார்.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 1571 ரேஷன் கடைகள் மூலம் சுமார் 10 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதனையடுத்து மாநகரிலுள்ள முள்ளுவாடி கேட், கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று நிவாரணத் தொகை பெற டோக்கன் வினியோகம் செய்யும் பணிகள் நடைபெற்றது.