Categories
தேசிய செய்திகள்

10 நாட்களில்… 500 படுக்கை வசதியுடன் புதிய மருத்துவமனை… டெல்லி மாநிலம் அதிரடி…!!

டெல்லி மாநிலத்தில் 10 நாட்களில் 500 படுக்கையுடன் கூடிய புதிய மருத்துவமனை ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி போன்றவை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன.

கொரோனா அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று டெல்லி. டெல்லி மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் படுக்கை வசதி இல்லாத காரணத்தினாலும் பல நோயாளிகள் உயிரிழந்து வந்தனர். அம்மாநிலத்தில் அடிப்படை வசதிகூட இல்லாமல் நோயாளிகள் தவிர்த்து வந்த நிலையில் தற்போது 10 நாட்களில் 500 படுக்கை வசதியுடன் கூடிய புதிய மருத்துவமனை ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 500 படுக்கைகளும் ஐசியு  வசதி இருப்பதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |