Categories
தேசிய செய்திகள்

பி.எம்.கேர் நிதியிலிருந்து…. விரைவில் 1 லட்சம் ஆக்சிஜன் கருவிகள் – மத்திய அரசு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு பலரும் உதவி செய்து வருகின்றனர்.

அந்தவகையில் பி எம்கேர் நிதியில் இருந்து விரைவில் ஒரு லட்சம் ஆக்சிஜன் கருவிகள் வாங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து மருத்துவ ஆக்ஸிஜன் வினியோகம் 7 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21 சதவீதமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |